
தமிழ் வாழ்கிறது
தமிழ் நாடு அழிய,
இவன் வாழ்கிறான்
தமிழினம் அழிய,
மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க,
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா,
இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை,
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட ,
மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ ,
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ,
பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள் வாழ,
இலவசம் மயக்கம் கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய் வாழ,
தமிழை தேடுகிறேன்
செம்மொழி தமிழை தேடுகிறேன்,
தமிழனை தேடுகிறேன்,
தன்மான தமிழனை தேடுகிறேன்,
கட்சிக்கு சொந்தக்காரன்
பாதி தமிழன்,
சாதிக்கு சொந்தக்காரன்
மீதி தமிழன்,
அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு,
அதை புரிந்து கொள்ளாதவரை
நீ தான் தமிழனே தமிழுக்கு சாபக்கேடு,
தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டு போக,
தமிழனின் வீரத்தின் பட்டியல்
குருடாகி போனது,
தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல் விளையாட,
தமிழ் நடனம் ஆடுகிறதாம்
டாஸ்மாக்கில் குடிகார தமிழன் ஆட,
தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலை அல்ல,
தமிழனம் ஒளிர்கிரதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திறிய,
வந்தாரை வாழ வைத்தானாம்,
வந்தவன் எல்லாம் ஏறி மிதிக்க,
இந்திய அன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழக மீனவனை ஏறி நசுக்க,
ஆம் எங்கும் தமிழ்நாடு வாழ்கிறது,
தமிழ் அழிய,
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய,
....பகலவன்....
0 comments:
Post a Comment