Sunday, May 30, 2010

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

நேற்று முன்தினம்(28-05-2010)அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.















Sunday, May 9, 2010

எனக்குள்…அழகோடு காதல்.



அழகு

அழகு என்ற வார்த்தையே அழகுதான். என்னைப்பொருத்தவரையில் இயற்கையின் அழகு ரொம்பப் பிடிக்கும். மனதுக்கு எப்போதும் திருப்தி தரக்கூடிய நிரந்தரமான அழகு அது.
பலர் சொல்வதைப்போல பெண்கள் அழகானவர்கள் தான். ஆனால்….(?)
பச்சைப் புல்வெளி, தோகைமயில், அந்திவானம், தனித்த ரயில்பாதை, பரிதிவட்ட வளர்பிறை, ஒற்றைரோஜா, போதிமரம், மழையில் நனையும் மலை, ஜோடிக்கிளிகள் இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்குள் பரவசமான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.



காதல்

காதலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிக்கூறுவார்கள்:
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லாமல் போவது

காதலில் களிப்பவர்கள் இப்படிக்கூறுவார்கள்
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லயித்திருப்பது

காதல் ஒரு மந்திரச்சொல். முன்னேறவும் வைக்கும், முடிச்சுப்போடவும் செய்யும். பொருத்தமான தெரிவை அடிப்படையாகக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நீந்தத் தெரிந்தவர்களுக்கு காதல்கடல் ஒரு வாழ்வுலகம். நீந்தத் தெரியாதவர்களுக்கு???
நான் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் ரசித்த பாடல்...



உன் பேரை சொல்லும் போதே

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
(உன் பேரை..)

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

Saturday, May 8, 2010

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !




தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக..இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா? எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?
அன்னையர் தினம் தான் பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்தவிழாவாகக் கொண்டாடப்பெற்றதாகவரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அன்றைய கிரேக்கப் பேரரசன் ரோனஸ்(Cronus) மனைவியும் கடவுளின் அன்னையாகவும் மக்களால் வணங்கப்பெற்ற ரேயா (Rhea) வுக்கு விழாவெடுத்தான். மக்கள் இந்தவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

இதே காலகட்டத்தில், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமப் பேரரசில் கடவுளின் அன்னையாகக் கருதி வணங்கப்பெற்ற சைப்ளி(Cybele)க்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பெற்ற வரலாறும் உண்டு. மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட இந்தப் பெருவிழாவிற்கு ஹிலாரியா(Hilaria) விழா என்றும் மார்ச் மாதத்தில் 15 முதல் 18ம் தேதி வரை என்று ஆண்டுதோறும் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன.

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.


1600களில் இங்கிலாந்தில் இடம்விட்டு இடம்பெயர்ந்து வேலைசெய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வேலை செய்யும் எஜமானர்கள் எங்குவேலை செய்யச் சொல்லுகிறார்களோ அங்கேயே தங்கி வேலை பார்ப்பதும், குடும்பத்தை ஓரிடத்திலுமாய் வைத்துவிட்டுச் செல்லுவதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தனர்.
அப்படி வேலையில் இருப்பவர்களுக்கு வருடாந்திர விடுமுறை போல இந்த மதரிங் சண்டேக்கு விடுப்பு அளித்து எஜமானர்கள் அனுப்புவது வழக்கம். அப்படிச் செல்லுபவர்கள் ஒருவித விசேசமான கேக் ( அதையும் மதரிங் கேக் என்றே குறிப்பிட்டார்கள்.) தயாரித்தோ அல்லது வங்கிச்சென்றோ தமது அன்னையரோடு விடுமுறையைக் கழித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அன்னையர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்று 1872ல் ஜூலியா வார்டு ஹோவ் (Julia Ward Howe )முதன் முதலில் பாஸ்டனில் ஒரு பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டினார். திருமதி ஹோவ், குடும்பத்தில் அயராது உழைக்கும் அன்னைக்கு ஒருநாளை அமைதியாகக் கழிக்க அன்னையர் தினம் என்று ஒருநாளை அனுசரிக்க வேண்டும் என்று அக் கூட்டத்தில் பெருங்குரலெடுத்துக் கூறினாலும் அவருக்குப் பின் அதை எடுத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை.



"அன்னா மரியா ரீவிஸ் ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா·ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். இவர் கிறிஸ்தவ பாதிரியார் அருட்திரு.ரீவிஸ் மகளாவார். 1852ல் அன்னா, கிரான்வில்லி இ ஜார்விஸ் என்பாரை மணம் புரிந்து மேற்கு வர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் குடியேறினார். பணிபுரியும் பெண்களுக்கான நலச் சங்கங்களை துவக்கினார்; பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தி உதவி செய்தது.

பாட்டிலில் வினியோகிக்கப்படும் பால் மற்றும் உணவு வகைகளை பரிசோதித்து அளிக்கும் பொறுப்பையும் இந்தச் சங்கம் ஏற்றுக்கொண்டு ஆற்றிய சேவைகளைக் கண்ட அண்டை நகரங்களான ·பெட்டர்மேன், ப்ருண்ட்டிடவுன் பிலிப்பி, மற்றும் வெப்ஸ்டர் போன்ற நகரங்களும் சங்கங்களை துவக்கிட விருப்பம் தெரிவிக்க அன்னா சுகாதரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சென்று வழிநடத்தினார்.

தன்னுடைய குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துபோக நேரிட்ட போதிலும் மனம் தளராது பணிபுரிந்தார். பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது உள்நாட்டுக் கலகம் மூள இந்தச் சங்கங்களின் பணி இரட்டிப்பானது. யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டுவந்து வைத்து மருந்திட்டு, உணவு,உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார்.

அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அன்னா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். அவருடைய 72வது வயதைக் குறிக்கும் வகையில் பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதை(விதை)க்கப்பட்டபோது கிராப்டன் ஆன்ரூஸ் சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது! மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

1908ம் ஆண்டு மே 10ம்நாள் பிலடெல்பியா அரங்கில் 5,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணிநேரம் பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! அதனைத் தொடர்ந்து அன்னையர் தினக் கமிட்டி ஒன்றை அங்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்! அந்த அமைப்பு உலக அளவில் இதன் நோக்கத்தை எடுத்துச் செல்லும் என்று அறிவித்தார்!



ஜார்விஸ் அம்மையார் எதிர்பார்த்ததைவிட 1909ம் ஆண்டே அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்!

1910ம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா ஆளுநர் வில்லியம் இ கிளாஸ்காக் ஏப்ரல் 26ம்தேதி அன்னையர் தினமாக அறிவிப்பை வெளியிட்டார்!அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களான அலபாமா ஹெ·ப்ளின், டெக்ஸாஸ் செப்பார்டு ஆகிய இருவரும் இணைந்து மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கக்கோரும் சட்ட முன்வடிவைச் சமர்ப்பித்தனர்! 1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.

கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும்; எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை; ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை; உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று காசு....ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம்"செண்டிமெண்ட்" நாளாக இருக்கவேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
"ஒரு அன்னையின் அன்பு ஒவ்வொருநாளும் புதிதாகவே பூக்கும் என்ற ஜார்விஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தநாளில் நம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு இணையற்ற அன்பைப் பொழிய பிரத்யேகமான தீர்மானங்களை நமக்கு நாமே நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்! இனிய வார்த்தைகள் மூலம், அன்பளிப்புகள் மூலம், நம் அபிமானத்தின் மூலம், இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம், அவளைச் சிறப்பியுங்கள்; அன்னையின் இதயம் சந்தோசத்தால் ஒவ்வொருநாளும் நிரம்பிவழியச் செய்யுங்கள்! குறிப்பாக அன்னையர் தினத்தன்று அவளை விசேடமாக கவனியுங்கள்! அன்னையின் அருகில் இல்லாத சூழலா, அடிக்கடி மடலிடுங்கள்! அதுமட்டுமல்ல அவளிடமுள்ள விசேட குணத்தைச் சுட்டிக்காட்டிஅவளை நீங்கள் எவ்வாறெல்லாம் நேசிக்கிறீர்கள் என்று உணர்த்துங்கள். ஈன்ற பொழுது மகிழ்ந்ததைக் காட்டிலும் அவளை உங்கள் செயல் மகிழ்விக்கச் செய்வதாக இருக்கவேண்டும் என்கிறார்!


"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.


கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 20,000,000 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப! வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடைவிரித்துள்ளனர்! அன்னையின் உருவப்படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

எகிப்து மற்றும் லெபனானில் மார்ச் 21ம்தேதியும், அங்கேரி, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்றும் பிரேசில், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா, கனடா, சுலோவோகியா, அல்பேனியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடத் தலைப்பட்டதும் ஒவ்வோர் ஆண்டும் இந்தப்பட்டியலில் புதிதுபுதிதாக இடம்பிடித்து இன்றைக்கு உலகம் முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டது.



அம்மா என்று அழைக்காத உயிர் ஏதும் உண்டா? அம்மா என்றால் அன்பு என்றும் தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை; எனக்கொரு தாய் இருக்கின்றாள்; என்றும் என்னைக் காக்கின்றாள்...போன்ற திரைப்படப் பாடல்கள் அன்னையின் புகழை வீதிகளில் முழக்கினாலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளம் உடைந்து நித்தம் கண்ணீர் விடும் அன்னையர்கள் நாளும் பெருகுவதும் ஒருபுறம் வேதனை தருவதும் தவிற்க இயலாததாகிவருகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் மூலமாகவாவது ஒரு சில அன்னையர்கள் தன் பிள்ளைகளோடு வசிக்கும் பேறு கிடைக்கப் பிரார்த்திப்போம்.

நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம்; வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை!"

தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா...

உலக நாயகன் கமல்ஹாசன்




களத்தூர் கண்ணம்மா >>>>>>>> <<<<<<<<<< உன்னைப்போல் ஒருவன்


நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள். கமல்ஹாசன் தற்சமயம் சென்னை மயிலாப்பூரில் லஸ் சர்ச் சாலையில், 63ஆம் இலக்க வீட்டில் வசிக்கிறார்.

விருதுகள்

கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.





திரைப்படக் குறிப்பு

 1960 - தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம்
 1962 - மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம்
 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
 1977 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்



கமல்ஹாசன் கலைப்பயணம்
 2009 - "உன்னைப்போல் ஒருவன்" 'WEDNESDAY' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மீள்தயாரிப்பு
 2008 - தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)
 2006 - வேட்டையாடு விளையாடு
 2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)
 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)
 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)
 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)
 2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
 2004 - விருமாண்டி (த) (எ) (இ)
 2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)
 2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)
 2003 - அன்பே சிவம் (எ)
 2002 - பஞ்சதந்திரம்
 2002 - பம்மல் கே.சம்பந்தம்
 2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)
 2001 - லேடீச் ஒன்லி
 2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)
 2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)
 2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
 2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)
 2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)
 2000 - தெனாலி
 2000 - தெனாலி (தெலுங்கு)
 2000 - ஹே ராம் (த) (எ) (இ)
 2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)

தொண்ணூறுகள்
 1998 - காதலா காதலா
 1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
 1996 - அவ்வை சண்முகி
 1996 - பாமனெ (தெலுங்கு)
 1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
 1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
 1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
 1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
 1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
 1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)
 1995 - சதி லீலாவதிi (த)
 1994 - நம்மவர்
 1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
 1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
 1994 - மகாநதி (திரைப்படம்) (b)
 1993 - கலைஞன்
 1993 - மகராசன் (த)
 1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
 1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
 1992 - சிங்காரவேலன்
 1991 - குணா
 1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
 1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
 1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
 1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)

எண்பதுகள்

 1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
 1989 - வெற்றி விழா
 1989 - சாணக்யன் (மலயாளம்)
 1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
 1989 - ச்ப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
 1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
 1988 - உன்னால் முடியும் தம்பி
 1988 - சூர சம்ஹாரம்
 1988 - டெய்சி (மலையாளம்)
 1988 - சத்யா (த)
 1988 - பேசும் படம்
 1987 - புஷ்பக் (ஹிந்தி)
 1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)
 1987 - புஷ்பக விமானா (கன்னடம்)
 1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
 1987 - நாயக்குடு (தெலுங்கு)
 1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)
 1987 - நாயகன் - ஹிந்தித் திரைப்படமான தயவன் இல் இப்படத்தினை போன்ற சாயல்.
 1987 - பேர் சொல்லும் பிள்ளை
 1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
 1987 - விரதம் (மலயாளம்)
 1987 - காதல் பரிசு
 1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
 1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
 1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
 1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
 1986 - விக்ரம் (த)
 1986 - நானும் ஒரு தொழிலாளி
 1986 - சிப்பிக்குள் முத்து
 1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - ஹிந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது

ஈஷ்வர் அணில் கபோருடன்

 1986 - மனக்கணக்கு (நட்புக்காக)
 1985 - தேகா பியார் துமாரா (ஹிந்தி)
 1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
 1985 - மங்கம்மா சபதம்
 1985 - ஜிராப்டார் (ஹிந்தி)
 1985 - சாகர் (ஹிந்தி)
 1985 - உயர்ந்த உள்ளம்
 1985 - அந்த ஒரு நிமிடம்
 1985 - காக்கிச் சட்டை
 1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில்

மறு தயாரிப்பு.

 1984 - கரிஷ்மா (ஹிந்தி)
 1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
 1984 - ராஜ் திலக் (ஹிந்தி)
 1984 - யாட்கார் (ஹிந்தி)
 1984 - ஏக் நை பகெலி (ஹிந்தி)
 1984 - ஜே தேஷ் (ஹிந்தி)
 1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
 1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
 1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
 1983 - சத்மா (ஹிந்தி)
 1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
 1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)
 1983 - சினேக பந்தம் (மலையாளம்)
 1983 - சட்டம்
 1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
 1983 - சாரா ஸீ சிந்தகிi (ஹிந்தி)
 1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)
 1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
 1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)
 1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
 1982 - பகடை பன்னிரெண்டு
 1982 - ஜே தோ கமல் ஹொகயா (ஹிந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் ஹிந்தித் தயாரிப்பு.
 1982 - ராணித் தேனி (நட்புக்காக)
 1982 - எழம் ராத்திரி (மலையாளம்)
 1982 - சகலகலா வல்லவன்
 1982 - சனம் தேரி கசம் (ஹிந்தி)
 1982 - ஷிம்லா ஸ்பெஷல்
 1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக ஹிந்தியில் மறுதயாரிப்பு.
 1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)
 1982 - அந்தகடு (தெலுங்கு)
 1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)
 1982 - வாழ்வே மாயம்
 1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
 1981 - எல்லாம் இன்பமயம்
 1981 - டிக்! டிக்! டிக்!
 1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
 1981 - சங்கர்லால்
 1981 - சவால்
 1981 - கடல் மீன்கள்
 1981 - எக் துஜே கெ லியே (ஹிந்தி)
 1981 - ராஜ பார்வை (த)
 1981 - ராம் லக்சுமன்
 1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)
 1981 - மீண்டும் கோகிலா
 1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
 1981 - தில்லு முல்லு (நட்புக்காக)
 1980 - நட்சத்திரம் (நட்புக்காக)
 1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)
 1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)
 1980 - வறுமையின் நிறம் சிகப்பு
 1980 - குரு
 1980 - உல்லாசப் பறவைகள்

எழுபதுகள்

 1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)
 1979 - நீல மலர்கள் (நட்புக்காக)
 1979 - மங்கள வாத்தியம்
 1979 - கல்யாணராமன் (தமிழ்)
 1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
 1979 - இடிகாதா காது (தெலுங்கு)
 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்
 1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
 1979 - நினைத்தாலே இனிக்கும்
 1979 - தாயில்லாமல் நான் இல்லை
 1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
 1979 - நீயா!
 1979 - சிகப்புக்கல் மூக்குத்தி
 1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
 1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
 1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
 1978 - மதனோல்சவம் (மலையாளம்)
 1978 - யீட்ட (மலையாளம்)
 1978 - அவள் அப்படித்தான்
 1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!
 1978 - சிகப்பு ரோஜாக்கள்
 1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)
 1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
 1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
 1978 - இளமை ஊஞ்சலாடுகிறது
 1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)
 1978 - நிழல் நிஜமாகிறது
 1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
 1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
 1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்
 1977 - நாம் பிறந்த மண்
 1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
 1977 - ஆடு புலி ஆட்டம்
 1977 - 16 வயதினிலே
 1977 - ஊர் மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
 1977 - நிறைகுடம் (மலயாளம்)
 1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
 1977 - கபிதா (வங்காளம்)
 1977 - உன்னை சுற்றும் உலகம்
 1977 - சிறீதேவி (மலையாளம்)
 1977 - மதுர சொப்னம் (மலையாளம்)
 1977 - அவர்கள் (நட்புக்காக)
 1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)
 1977 - சிவதாண்டவம் (மலையாளம்)
 1977 - உயர்ந்தவர்கள்l
 1976 - லலிதா (நட்புக்காக)
 1976 - மோகம் முப்பது வருஷம்
 1976 - மூன்று முடிச்சு
 1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)
 1976 - பொன்னி (மலையாளம்)
 1976 - இதய மலர்
 1976 - குமார விஜயம்
 1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
 1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)
 1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
 1976 - சத்தியம்
 1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)
 1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)
 1976 - மன்மத லீலை
 1976 - சமசியா (மலையாளம்)
 1976 - அப்பூப்பான் (மலையாளம்)
 1976 - அக்னி புஷ்பம் (மலயாளம்)
 1975 - அந்தரங்கம்
 1975 - ராசலீலா (மலையாளம்)
 1975 - மற்றொரு சீதா (மலையாளம்)
 1975 - திருவோணம் (மலையாளம்)
 1975 - அபூர்வ ராகங்கள்
 1975 - மாலை சூட வா
 1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
 1975 - பட்டிக்காட்டு ராஜா
 1975 - தங்கத்திலே வைரம்
 1975 - மேல்நாட்டு மருமகள் (வானி கண்பதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
 1975 - தேன் சிந்துதே வானம்
 1975 - ஆயிரத்தில் ஒருத்தி
 1975 - பட்டாம்பூச்சி
 1975 - சினிமா பைத்தியம்
 1974 - பணத்துக்காக
 1974 - ஆய்னா (ஹிந்தி)
 1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)
 1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
 1974 - அவள் ஒரு தொடர்கதை
 1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)
 1974 - அன்புத் தங்கை
 1974 - கன்யாகுமாரி (மலையாளம்)
 1974 - நான் அவனில்லை
 1974 - குமாஸ்தாவின் மகள்
 1974 - பருவ காலம்
 1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்
 1973 - அரங்கேற்றம்
 1972 - குறத்தி மகன்
 1970 - மாணவன்

அறுபதுகள்

 1963 - ஆனந்த ஜோதி
 1963 - வானம்பாடி
 1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)
 1962 - பாத காணிக்கைi
 1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
 1960 - களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்
 ராஜ பார்வை
 அபூர்வ சகோதரர்கள்
 சத்யா
 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
 மைக்கேல் மதன காமராஜன்
 தேவர் மகன்
 ஹே ராம்
 விருமாண்டி
 மகளிர் மட்டும்
 மும்பை எக்ஸ்பிரஸ்

 1999 - விவி நெ.1 (இந்தி)
 1997 - விராசாத் (இந்தி)

 நன்றி. இணையம்.
மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்
 2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)
 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
 1974 - ஆய்னா (நடனங்கள்)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்

 1998 - Chachi 420
 2000 - ஹே ராம்
 2004 - விருமாண்டி

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்




1.மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

2.பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

3.மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்

4.விதியை நம்பி மதியை இழக்காதே.

5*மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

6.மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

7.பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

8.பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

9.பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

10.தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

11.கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

12.பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

13.ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

14.ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

15.ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

16.என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

17.எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.

18.மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்


19.வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.