Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, April 11, 2010

நட்பு கவிதை



தொடரும் நம் நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தோம்.....
அடிக்கடி பேசிக் கொண்டோம்....
உறவுகளுக்கு மேலே நட்பு ஆனோம்...
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடரும் நம் நட்பு....


உதிரா நட்பு

உலகில் பூக்கும் பூவெல்லாம் உதிரலாம் - ஆனால்
நம் நட்பு என்றும் உதிராது.


நட்பை நேசி

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி....


நட்பு சிறை

உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.
தவறுகள் செய்தால் தண்டித்து விடு
ஆனால்
விடுதலை மட்டும் செய்துவிடாதே.


நட்பென்பது

நட்பென்பது ஊசலாடும் உறவல்ல ..
உயிரோட்டமுள்ள உணர்வு....


காதலர்கள் & நண்பர்கள்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்
ஆனால்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.

Saturday, March 20, 2010

கவிதை

கடும் கோபத்தில்
கட்டுக்கடங்காத் தேனீக்கள்

கூட்டமாய் என்னை நோக்கி....

நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........

நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....

ஆனாலும்

நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....

அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்

வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......

ஊட்டும் தேனைத்தான்
சேகரிக்கும் என்றாலும்
அதற்கு....
கொட்டும் விசக்கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு

தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை


கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்


அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்


எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்

வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....