Saturday, March 20, 2010

கவிதை

கடும் கோபத்தில்
கட்டுக்கடங்காத் தேனீக்கள்

கூட்டமாய் என்னை நோக்கி....

நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........

நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....

ஆனாலும்

நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....

அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்

வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......

ஊட்டும் தேனைத்தான்
சேகரிக்கும் என்றாலும்
அதற்கு....
கொட்டும் விசக்கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு

தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை


கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்


அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்


எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்

வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....

0 comments:

Post a Comment