Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

Saturday, May 7, 2011

சீமான் vs (நிழல் எதிரி)கனிமொழி



நிறைய இருக்கு …..18-ம் தேதி மதுரையில இயக்குனர் சீமான் தலைமையில நாம் தமிழர் இயக்கம் பட்டைய கிளப்புது. மதுரையில ஆரம்பிச்சு அப்படியே ஒவ்வொரு மாவட்டமா நடத்திகிட்டு வரப்போறாராம். மதுரையில் நடக்குற கூட்டத்துக்கு இளைஞர்களின் வரவேற்பு வெகு ஜோராம். கட்டுக்கடங்காம திரண்டிருக்காங்க. அவர்களின் ஒரே உற்சாகம் தலைவர் பிரபாகரன் எப்போ வருவார். மீண்டும் எப்போ போராட்டத்தை முன்னெடுப்பாருங்கிறதுதான். அதுக்கு ஒரே பதில் இப்போதைக்கு ஒரு வருடம் அது பற்றி ஏதும் கேட்காதீங்க, பேசாதீங்க. ஒரு வருஷம் வரைக்கு நாம் நமது இயக்கத்தை பட்டிதொட்டி எல்லாம் வளக்கனும். பல லட்சக்கணக்கில் இளைஞர்களை திரட்டனும். வலுவான ஒரு அமைப்பை உறுவாக்கனும். இது நடந்து முடியுறதுக்கும் தலைவர் பிரபாகரன் வெளிய வர்றதுக்கும் சரியா இருக்கும். அதுக்கு பிறகு உங்களுக்கான பதிலை அவரே பேசுவாருன்னு சொல்லியிருக்கார். இளைஞர் பட்டாளம் உற்சாகத்தோட இருக்கு.” என்ற சித்தன் இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. திமுக தரப்பு இதை அவ்வளவா ஏத்துக்க முடியாம இருக்கு. ஈழ மக்களுக்கான குரல் என்றால் அது கனிமொழி செய்யுறதா மட்டும் இருக்கனும்னு கலைஞர் விரும்புறார். கனியோட வளர்ச்சிக்கு சீமான் முட்டுக்கட்டையா இருப்பாருன்னு நினைக்குறாய்ங்க. அதனால இப்பவே அதுக்கு முட்டுக்கட்டைய போடுற வேலையும் தொடங்கியிருக்காராம். அதாவது சீமான் கூட்டத்துக்கு பக்கபலமா இருக்குற ஆளுங்கள ஓரு கட்டத்துல பிரிச்சு வெளியே கொண்டு வந்துடறது. இல்லே சீமான் மேல படிப்படியா வழக்கு போட்டு முடக்குறது. இதுக்கு எதிர்ப்பு இருந்தா, கைது படலத்தப்பவே மறு பக்கம் ஈழத் தமிழர்களுக்காக உண்மையான ஆதரவு போராட்டம்னு கனிமோழி மூலமாகவோ, இல்ல சீறும் சிறுத்தை மூலமாகவோ நடத்திடறது. அப்படி செய்தா உண்மையான போராட்டம் காலியாயிடும் இல்லையா.. இப்படி நிறைய உள்ளடி வேலையும் திட்டமா வச்சிருக்காங்கன்னு சேதி கசிஞ்சிருக்கு. பொருத்திருந்து பார்ப்போம்” என்றார்.

அடப்பாவிங்களா, இப்பத்தான் உறுப்படியா மரக்கன்னு நடற வேலையே தொடங்குது. அதுக்குள்ள சுடுத்தண்ணி ஊத்துற திட்டத்தை வச்சிருந்தா நாடு உறுப்படுமா?

நாடு உறுப்படுறதா முக்கியம், தன் குடும்பம் உறுப்படறதுதான முக்கியம். மத்திய அரசு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி வச்சாதான நல்லா இருக்க முடியும். எப்படியோ தன் மகள் கனி மூலமா நல்லத செய்யுறதா காய் நகர்த்தி கடைசியில அங்க அதிகாரமே இல்லாத ஒரு பொம்மை முதல்வர் ஆட்சியை கொண்டுவந்துட வச்சிடறதுதான் முக்கியம். தமிழர்களுக்கு நல்லத செய்ததா ஒரு பேரு. அப்படியே எங்க சகுனி வேலைக்கெல்லாம் துணையா இருந்தீங்கன்னு சென்ட்ரல் அரசுகிட்டேயும் ஒரு நல்ல பெயர வாங்கிடுவாரு. அரசியல்ல சனுனிகளுக்குதான முக்கியத்துவம்.

———————————————————————————–
அன்பு நாம் தமிழர் பேரியக்க உறவுகளே..

மேலுள்ள செய்தியை பாருங்கள்.. நமக்கு எதிராக நயவஞ்சக கூட்டம் சதி செய்ய ஆரம்பித்துவிட்டது… நம் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு நாசவேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.. அவர்களுக்கு பதிலடி தரும் முகமாக அண்ணன் சீமான் அவர்களின் கரத்தை பலப்படுத்துவோம்..

நாம் தமிழர் பேரியக்கத்தை வலுவான இயக்கமாக மாற்றுவோம்.. உறவுகள் எண்ணிக்கையை பெருக்கவும்.. நம் இயக்க செய்திகளை பரப்பவும்.. நாம் வளர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பதை நிரூபிப்போம்…

வெல்க தமிழ் தேசியம்.. வாழ்க தேசியத்தலைவர்..