Thursday, April 29, 2010

சிரிங்க...சிரிங்க...

1)அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!

2) மூன்று மோசமான வாழ்க்கை நிலைகள்:
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.


3) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!

4) அன்று அவள் கைப் பிடிக்க என்னை கை விட்டாயே! இன்று அவள் கை விட்டவுடன் உன் கையை தாங்கிப் பிடிப்பது நான்தானே? by "GOLD FLAKE & KINGS"

5) மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!

6)டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

7) கவிதை:
போகும் போது
ரசித்துவிட்டுப் போ!
திரும்பி வந்தால்
இருக்காது....
பஸ் ஸ்டாப் பிகர்.....

8)குழந்தை: அம்மா... காந்தி செத்துட்டாரா?
அம்மா: ஆமா செல்லம்.....
குழந்தை: நேரு?
அம்மா: அவரும் போய்ட்டாருடா....
குழந்தை: அறிஞர் அண்ணா?...
அம்மா: அவரும் போய் சேந்துட்டாருடா......
குழந்தை: அப்ப நாட்டுல நல்லவங்களே இல்லையாமா?....
அம்மா: கவலை படாதே செல்லம்... இந்த தமிழ் நாட்டுல "சிலம்பரசன் சேகுவேரா

" ன்னு ஒருத்தர் ப்ளாக் எழுதிகிட்டு இருக்கார்... அவுங்க போதும் இந்த நாட்டுக்கு.....

9) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “சிலம்பரசன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

Saturday, April 24, 2010

அம்மாவுக்காக




எங்கோ பிறந்தவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
என்னை பிறப்பித்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உண்ணப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உணவு இட்டவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

கைபிடிக்க போகின்றவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
கைபிடித்து சொல்லிக்கொடுத்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

வாலிபத்தை சுமப்பவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
வயிற்றில் சுமந்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உறங்கப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உறங்க தாளாட்டியவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

என்னுடன் வாழப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
எனக்காக வாழ்பவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

காதல் ரோஜாவே



காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில் இருப்பதை விட ,

காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில் இருப்பது மேலானது …





ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Friday, April 23, 2010

Sunday, April 18, 2010

ஆட்டோகிராஃப்

நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.


ஆட்டோகிராஃப்

மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் வாசுகி

ஐந்தாம் வகுப்பில் ரோகினி
ஆறாம் வகுப்பில் அஞ்சலி
+1ல் ரம்யா
கல்லூரியில் ரேவதி

2003 ஜனவரி முதல் மே வரை சென்னை இல் தேவி
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் நெய்வேலி இல் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை மஹாலக்ஷ்மி!

இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா.

Saturday, April 17, 2010

கனவு காணுங்கள் ...

உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்..,

சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,
சினேகா வந்தால் செத்து போவீர்கள்..,

அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,

ஆகையால், கனவு காணுங்கள்

காதலில் தவிக்கும் சந்தியாவைப்
பற்றி அல்ல...

கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவை பற்றி...

ஜெய்ஹிந்த்....


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Wednesday, April 14, 2010

சேகுவேரா-பாமரன்



மக்களுக்காகவே வீழ்ந்த ஒரு புரட்சியாளனின் கதை.


அவன் பெயர் குவேரா. புரட்சிக்கு இன்னொரு பெயர் சூட்டலாம் என்று எவராவது எண்ணினால் கூச்சமின்றி கூப்பிடலாம் குவேரா என்று.

ஆசிய நாடுகள் என்றாலே இந்தியா – இலங்கை – பாகிஸ்தான் என இங்கிருப்பதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பெரு – பிரேசில் – மெக்ஸிகோ – என பலவற்றைச் சொல்லலாம். அவற்றுள் ஓர் அரிய தேசம்தான் அர்ஜன்டைனா. அங்குதான் குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்டது.
ஆம், அதுதான் அவன் பிறந்த மண்.

அப்போது நாள்காட்டி ஜுன் 14 – 1928 என்று அறிவித்தது.

அவன் வளர்ந்த பொழுதுகளை அருகிருந்து ரசித்தவர்கள் குறும்புக்கு இன்னொரு பெயரும் குவேரா தான் என்று அடித்துச் சொல்வார்கள்.

அவன் வளர வளர குறும்போடு சேர்ந்து கூடவே வளர்ந்தது அவனது அறிவு மட்டுமில்லை அளவிடற்கரிய அவனது மனிதநேயமும்.
ரப்பர் மிதவைகளைத் தூக்கி ஆற்றில் போடுவான். தாவிக் குதித்த பிறகு தொடங்கும் அவனது பயணம் 100 – 150 மைல்கள் என. பத்து பதினைந்து நாட்கள் கழித்தே வீடு வந்து சேருவான்.

இன்றோ… நாளையோ… இறுதி மூச்சையும் விட்டுவிடும் அந்த லுானா… அதையும் விடமாட்டான். அதில் ஏறிக்கொண்டு ஐநூறோ அறுநூறோ மைல்கள் பயணம் செய்த பிறகே அவன் மனம் அமைதிப்படும். போகிற வழியெல்லாம் தென்படும் மக்களது வாழ்க்கை முறைகளையும், அவர்கள் சுமந்த கணக்கிலடங்கா சோகங்களையும் கணக்கிட்டுக் கொண்டே வீடு திரும்புவான்.

அந்த அர்ஜன்டைனா நாடு அவனையும் ஒரு மருத்துவனென்று சான்றளித்தபோது நாட்காட்டி மார்ச் 7, 1953 என்று அறிவித்தது.

மருத்துவரென்றால் பத்தாவது பெயிலாகிவிட்டு போலிப்பத்திரம் தயாரித்து வாழ்ந்த மருத்துவனல்ல.

மருத்துவரென்றால்…
‘எக்ஸ்ரேவுக்கு இத்தனையாகும்,
ஸ்கேனிங்குக்கு அத்தனையாகும்
எல்லாம் சேர்த்து மொத்தம் உன் சொத்தில் பாதி கட்டணமாகும்’ என உயிர்வாங்கும் மருத்துவனல்ல.

அவன் உயிர் கொடுக்கும் மருத்துவனாகவே மலர்ந்தான்.

மருந்துப்பைகளைத் தனது தோளில் சுமந்தபடி கொலம்பியா, வெனிசுலா எனும் துார தேசங்களிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புகளைத் தேடிச் சென்றான் மருத்துவம் பார்க்க.

கடமைக்கும், வியாபாரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த மருத்துவன் அவன்.

இப்படிப் பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்ட குவேரா மெக்ஸிகோ நாடு வந்து சேர்ந்தபோதுதான் எதிர்காலம் அவன் எதிர்பாராத வேலைகளை அவனுக்காக வைத்துக் கொண்டு காத்திருப்பது புரிய வந்தது. அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பல்வேறு சம்பவங்கள் சங்கமித்த மண்தான் மெக்ஸிகோ.

அங்குதான் அவன் நாற்பதாண்டுகளாய் நகர்த்த முடியாத நாயகனாய் கியூபா நாட்டின் பிரதமராகவும், புரட்சியின் பிதாமகராகவும் வீற்றிருக்கிற பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தான்.

அப்போது நாட்காட்டி ஜுலை 14, 1955 என்று அறிவித்தது.

மருத்துவராய் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட குவேராவும் புரட்சியாளனாய் கியூபா நாட்டிலிருந்து வெளியேறிய பிடல் காஸ்ட்ரோவும் மெக்ஸிகோ நாட்டில் தான் அறிமுகமாகிறார்கள்.

விடிய விடிய நடக்கிறது விவாதங்கள்.

ஆனால், விடிந்த பிறகே விளங்குகிறது பிடலுக்கு… அந்த 27 வயது மருத்துவனும் கியூபா நாட்டு விடுதலைக்காக
வீர சபதமேற்று தன்னோடு பயணப்பட்டுவிட்டான் என்பது.

கப்பலில் பயணப்பட்டவர்கள் கரை இறங்கியபோது எதிர்கொண்டு அழைத்தது ஏவுகணைகளும்
எதிரிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும்தான்.

தப்பித் பிழைத்த அவர்களை தாவி அணைத்துக் கொள்கிறது கியூபக்காடுகளும் மலை முகடுகளும்.

அப்போதுதான் ‘இனி தன் தோள்கள் சுமக்க வேண்டியது மருந்துப் பையை அல்ல. படைகளைச் சிதற அடிக்கும் துப்பாக்கியை’ என உணர்கிறான்.

படை மருத்துவன் படைத் தளபதியாய் பரிணாமம் பெற்ற நாற்பத்தி எட்டே மாதங்களில் பறந்தோடுகிறான் எதிரி.

விடுதலை கீதம் கியூப மண்ணில் இசைப்படும்போது…

பிப்ரவரி 16, 1959 என்று அறிவிக்கிறது நாட்காட்டி…

பிரதமராகிறார் பிடல்.

எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்காக உழைத்த அந்த இளைஞனுக்கு நன்றி செலுத்துகிறது நாடே. அவனை வாழ்த்தும் விதமாக கியூபா மக்கள் சே என்று செல்லப் பெயர் சூட்டி குதூகலிக்கிறார்கள்.

குவேரா எனும் பெயரோடு ‘சே’வும் சேர்ந்து கொள்ள சேகுவேரா என புதுப்பெயர் பெறுகிறான் அந்த இளைஞன்.

அந்நிய மண்ணில் பிறந்திருந்தாலும்
தங்களுடையதை கண்ணியமிக்க மண்ணாக்கிக் காட்டிய இளைஞனை கியூப நாட்டினுடைய தேசிய வங்கியின் தலைவராக்குகின்றனர்.

மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.

அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ருபாய் நோட்டுக்களில் ‘சே’ எனும் தனது செல்லப் பெயரை கையெழுத்தாக இடுகிறார் சேகுவேரா.

அடுத்து அந்நாட்டின் தொழில்துறை தலைவராக்குகின்றனர் குவேராவை.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

புதிய பொறுப்பேற்றுக் கொண்டவுடன் உள்ளுர் தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக அந்நிய நாட்டு கொள்ளை நிறுவனங்களுக்கு அழகிய பூட்டுகளை அனுப்பி வைக்கிறார் சேகுவேரா.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அடுத்தடுத்து அநேக சீர்த்திருத்தங்கள்,
அதற்கிடையே திடீர் திடீர் தலைமறைவு.
இதுதான் சேகுவேராவின் தொட்டில் பழக்கம்.

முதல் முறையாக அவர் தலைமறைவானபோது –
சேகுவேராவின் கதையை முடித்துவிட்டார் பிடல் காஸ்ட்ரோ என முதல் பக்க தலைப்புச் செய்திகள்.

மறுப்பார் பிடல்.
மீண்டும் வருவார் சேகுவேரா.

நாட்டின் எல்லையிலிருக்கும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களோடு அத்தனை நாளும் பணியாற்றிவிட்டு.

மறுபடியும் தலைமறைவு.
‘கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என அலறும் முதல் பக்கச் செய்திகள்.

மறுப்பார் பிடல்.
மீண்டும் வருவார் சேகுவேரா.
சுரங்கத் தொழிலாளர்களின் தோழனாகச் சில காலம் பணிபுரிந்து விட்டு.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

திடீரென ஒருநாள் மீண்டும் தலைமறைவு.
ஆனால் இந்த முறை தனது தோழன் பிடலுக்கு ஒரு நெஞ்சுருகும் மடல் ஒன்றை காணிக்கையாக்கிவிட்டு காணாமல் போகிறார்.

‘அயோக்கியர்களால் அல்லல் படும் இன்னொரு தேசத்திற்கு எனது தோள்கள் தேவைப்படுகிறதாம். எனவே பயணப்படுகிறேன். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் நம் கியூப மக்களை.
வெற்றி நமதே’ என்கிறது அக்கடிதம்.

தொழில் அமைச்சர் பதவியோ,
தேசிய வங்கியின் தலைவர் பதவியோ எதுவுமே அவருக்குப் பொருட்டில்லை. விடுதலைக்கு ஏங்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக போராடுவதே அவர் நேசித்த பெரிய பதவி.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனது பதவி விலகல் கடிதங்களை பிடலுக்கு அனுப்பிவிட்டு மாறுவேடத்தில் அவர் பயணப்பட்ட மண்தான் பொலிவியா.

அங்குள்ள உழைக்கும் மக்களது உன்னதப் போராட்டத்தில் சேகுவேரா தன்னையும் இணைத்துக் கொள்ளும்போது…

நாட்காட்டி நவம்பர் 4, 1966 என்று அறிவிக்கிறது.

‘இங்குள்ள போராட்டக்காரர்களுக்கு எப்படித் தெரிந்தது இத்தனை வித்தைகள்’ என விவரம் புரியாமல் வியக்கிறது பொலிவிய அரசு.
ஆனால்
ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

போராளிகளின் விதவிதமான தாக்குதல்கள் தொடரத்தொடர தலைசுற்றுகிறது பொலிவியப் படைகளுக்கு.
ஆனால்
ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அலறுகிறது அரசு தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல். உற்று நோக்கிக்கொண்டிருந்த அது அருகில் வந்து ஆறுதல் சொல்கிறது. அந்த அற்புதமான வீரனை வீழ்த்த ஆயுதமும் கொடுக்கிறது.

கியூபா மலைகளில் துவங்கிய யுத்தம் பொலிவியக் காடுகளில் தொடர்கிறது.
உறுத்தலோடு உற்று நோக்கிக் கொண்டிருந்த அது மெல்ல மெல்ல அந்த மாமனிதனை நெருங்குகிறது.

ஒரு அதிகாலைப் பொழுதில் பெரும்படையோடு அந்தப் புரட்சிக்காரன் ஆஸ்த்துமா தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த வேளையில் சுற்றிவளைத்துக் கைது செய்கிறது அது.

சேகுவேரா கைதான செய்தி எப்படியோ கசிந்துவிட… எட்டுத்திக்கும் செய்தி பறக்கிறது. அவரை விடுவிக்க கோரி மாபெரும் அறிஞர்களும், லட்சக்கணக்கான மக்களும் பங்கு கொண்ட பேரணி லண்டனில் நடக்கிறது.

‘சேகுவேராவை எதுவும் செய்துவிட வேண்டாம்’ என எழுந்த லட்சக்கணக்கானவர்களின் குரல்களை ஏளனம் செய்தபடி ‘அது’ தனது துப்பாக்கியின் திசையை சேகுவேராவை நோக்கி திருப்புகிறது.

துப்பாக்கியின் விசையை அழுத்தப்போகும் வேளையில்
‘ஒரு நிமிடம்…’ என்கிறார் சேகுவேரா.

சுடுவதை தாமதிக்கிறது அது.

இறந்து விடுவோம் என்பது உறுதியாகிவிட்ட வேளையில் அந்த இனியவனின் இதயத்திலிருந்து எழுந்த இறுதி வரிகள் இதுதான்…

“எனது தோழன் பிடலிடம் சொல்…
எனது மரணத்தால் புரட்சியை ஒருக்காலும் ஒடுக்கிவிட முடியாது என்று. அவரைத் தொடர்ந்து போராடச் சொல்.

என் மனைவி ஹில்டாவிடம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்.

உனது குறி சரியாக இல்லை நேராக எனது நெற்றியைக் குறி பார்.”

குரூரத்துடன் அது விசையைத் தட்டுகிறது.
அந்த மாவீரன் பொலிவிய மண்ணில் வீழ்கிறான்.

அப்போது நாட்காட்டி அக்டோபர் 9, 1967 என அறிவிக்கிறது.

எது அந்த ‘அது’?
உலக மக்களின் கூக்குரலை உதாசீனப்படுத்திய ‘அது’ எது?

அதுதான்: அமெரிக்கா.
மற்றும் அதனுடைய உளவுக்கும்பல்.

அன்புத்தோழி,

அம்மாவீரன் இறந்து முப்பது ஆண்டுகள் கழித்து இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இத்தனை ஆண்டுகளாக சிக்காமலிருந்த அப்புரட்சியாளனது எலும்புக்கூடு கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்டது.

தனது தோழனின் எலும்புக்கூட்டை இன்றைக்கும் கியூபாவினது பிரதமராக இருக்கின்ற பிடல் காஸ்ட்ரோ பெற்றுக்கொண்டு சேகுவேராவின் மகளிடம் ஒப்படைத்தபோது அவர் சொன்னது:

‘மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கிறார்’

இனிய தோழி,

இங்கு சாதிச் சண்டைகளிலும்,
மதப் பாகுபாடுகளிலும்,
எல்லைச் சண்டைகளிலும் எண்ணற்ற ‘மனிதர்கள்’
தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்க…
நமது புரட்சியாளனோ
எந்த மண்ணிலோ பிறந்து
எந்த மண்ணிலோ போராடி
எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்.

ஆம் தோழி,
நமது சேகுவேரா வாழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர், வீழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர்.

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறார்கள்.

தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Tuesday, April 13, 2010

உன் நினைவுகள்!



உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
டாஸ்மாக்கில்...
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

Sunday, April 11, 2010

நட்பு கவிதை



தொடரும் நம் நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தோம்.....
அடிக்கடி பேசிக் கொண்டோம்....
உறவுகளுக்கு மேலே நட்பு ஆனோம்...
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடரும் நம் நட்பு....


உதிரா நட்பு

உலகில் பூக்கும் பூவெல்லாம் உதிரலாம் - ஆனால்
நம் நட்பு என்றும் உதிராது.


நட்பை நேசி

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி....


நட்பு சிறை

உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.
தவறுகள் செய்தால் தண்டித்து விடு
ஆனால்
விடுதலை மட்டும் செய்துவிடாதே.


நட்பென்பது

நட்பென்பது ஊசலாடும் உறவல்ல ..
உயிரோட்டமுள்ள உணர்வு....


காதலர்கள் & நண்பர்கள்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்
ஆனால்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.

Thursday, April 8, 2010

பணம்




இருந்தால் தூக்கம் இல்லை

இல்லாவிட்டால் சொந்தம் இல்லை

இரண்டும் இல்லாமல்

இளமையை தொலைத்து

சேர்த்து அனுப்பியும்

தேவையில் பூர்த்தி இல்லை.


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா.

Wednesday, April 7, 2010

என்னருகில் நீ…………



என்னருகில்நீஇருந்தபோது என்னையறியாமலே எனக்குள் ஒருதிமிர் இருந்தது என்னையாராலும் அசைக்கமுடியாதென்று.... ஆனால்நீசற்று தூரம் சென்றதும்தான் எனக்கு புரிகிறது நீ என்னருகில் இல்லை என்றால் என்னை அசைத்து விடலாம் என்று.. அன்பே என்னருகில் இரு..நான் நானாக இருக்க.....

தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

அயல்தேசத்து ஏழை



இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான் துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !

மரஉச்சியில் நின்று ...
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான் பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்....நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம்! கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு! பழையசடங்குகள் மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில் மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது எங்களின் நீண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின் நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான் ஆறுதல் தருகிறது!
ஆம்... இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;

" இறுதிநாள் " நம்பிக்கையில்தான் இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு... முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை தினாரும் - திர்ஹமும்- ரியாலும் தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின் வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின் மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம் தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்... பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு! ..............


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா

Sunday, April 4, 2010

அஞ்சலி.... அஞ்சலி.... என் உயிர் காதலி.








Friday, April 2, 2010

அங்காடி தெரு






தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் இதுபோன்ற படங்கள் வரும். புத்தியும் மனசும் ஒரு சேர வலிக்கிற மாதிரி ‘பொளேர்’ என்று அறைந்துவிட்டு போகும்! ரங்கநாதன் தெருவின் கூச்சலும், நெரிசலும் இரண்டரை மணி நேரத்தில் நம்மை விட்டு கடந்து போனாலும், இரண்டொரு நாட்கள் விடாமல் ஒலிக்கிற இரைச்சலில் ஒன்று ‘தாயோளி முண்ட…’

லிங்கமும் கனியும் மட்டுமல்ல, ஒரு சில காட்சிகளில் வந்து போகிற கேரக்டர்கள் கூட, பசுமரத்தாணி போல பஞ்ச் வைத்துவிட்டு போவதுதான் வசந்தபாலனின் ஸ்டைல்!

ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்துதான் இயங்குனரின் பார்வை விரிந்திருக்கிறது. லேபர் சட்டங்களை வேஸ்ட் பேப்பர் போல கிழித்தெறியும் அதன் அதிகார பார்வையில், கண்கூசி நெளிகிற எத்தனையோ தொழிலாளர்களின் துயரத்தை சொல்ல, அவர்களை விடவும் கடுமையாக உழைத்திருக்கிறார் வசந்தபாலன். தோழரே, வாழ்க!

நள்ளிரவு. பஸ் ஸ்டாண்டில் கால்களால் உரசிக் கொள்ளும் காதலர்களாக காண்பிக்கப்படுகிறார்கள் மகேஷ§ம், அஞ்சலியும். இறுதியில் அவ்வளவு உற்சாகமாக விளையாடிய கால்கள் இரண்டுமே அஞ்சலிக்கு இல்லை என்று முடிகிறது கதை. இடையில் நடப்பது என்ன? கிராமத்திலிருந்து கொண்டுவரப்படும் இத்தகைய தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை பார்க்கிறார்கள். மதிய உணவுக்காக ஓடோடி செல்லும் அவர்கள் திரும்பி வர தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட். அந்த மதிய உணவுக் கூடம் இருக்கிறதே, அதற்கு பன்றிகள் கூடமே பரவாயில்லை. உள்ளே சூப்பர்வைசர்கள் என்று சொல்லப்படும் இரண்டாம் தர முதலாளிகளின் பாலியல் வக்கிரம். கொடூர தண்டனைகள் என்று வசந்தபாலன் கைகாட்டுகிற திசையெல்லாம் மனித உரிமை மீறல்கள்!

உறங்குகிற தொழிலாளர்களுக்கு புரண்டு படுக்க கூட இடமில்லாதளவுக்கு நெரிசல் மிகுந்த வாழ்க்கை. அந்த நேரத்திலும் காவலுக்கு கைத்தடியுடன் ஒரு காவலாளி! இப்படி காட்சிக்கு காட்சி கொத்தி கிழிக்கப்படுகிறது முதலாளித்துவத்தின் முகத்திரை. இங்கேதான் காதல் வளர்க்கிறார்கள் அஞ்சலியும் மகேஷ§ம். அந்த நிறுவனத்தின் எழுதப்படாத விதி, காதல் கூடாது! அதையும் மீறி காதலிக்கும் இருவரும் மாட்டிக் கொள்கிற காட்சியும், அவர்களுக்கு தரப்படும் தண்டனையும் தியேட்டரை ஒரேயடியாக உச் கொட்ட வைக்கிறது.

கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்படும் இருவரும் புது வாழ்க்கையை துவங்கும்போது மீண்டும் விதியின் கோரத் தாக்குதல். அகோரமான விபத்தொன்றில் கால்களை பறிகொடுக்கிறார் அஞ்சலி. அதன்பின்பும் தொடரும் கதையில் நம்பிக்கை துளிர்த்ததா? முடிவு.

புதுமுகம் மகேஷ§க்கு இது முதல் படம் என்றால் நம்பவா முடிகிறது? கண்ணெதிரே காதலிக்கு தரப்படுகிற தண்டைனையை கண்டு ஆவேசப்படும் அவர், மூர்க்கத்தனமாக சூப்பர்வைசரை தாக்குவது சினிமா ஹீரோயிசம் அல்ல. அடங்கிப் போகிற ஒவ்வொரு சாமானியனுடைய எழுச்சி! கிராமத்தில் ஒரு காதல் இவருக்கு. நகைப்புக்காக என்றாலும் சகிக்கலை சாமி. (கேஸ் ட்ரபுளால் பிரியுதாம் அந்த காதல்)

நடிப்பும், அதற்கு அட்சர பொறுத்தமான டப்பிங்குமாக அசத்தியிருக்கிறார் அஞ்சலி. அவ்வளவு கறாரான நிறுவனத்தில் ரகசியமாக சீட்டு பணம் பிடிக்கும் சாமர்த்தியம் அழகென்றால், குடும்ப சூழலுக்காக தன்னை விட்டு விலகும் மகேஷ் மீது காட்டுகிற கோபமும் அழகு. சூப்பர்வைசர் வெங்கடேஷ் பார்வையில் சிக்கிவிட்டோமே என்று அச்சம் காட்டும் அதே கண்களில் சகலவிதமான உணர்ச்சிகளும் கபடி ஆடிவிட்டு போகிறது. தமிழ்சினிமாவுக்கு மீண்டும் ஒரு அவார்டு நாயகி.

அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. சில காட்சிகளே வந்தாலும் அந்த மிடுக்குப் பார்வை மிரட்டல். ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போது நடக்கும் சம்பிரதாயமும், மரியாதைகளும் மக்கள் அறிந்திராத அரிதான காட்சிகளில் ஒன்று. கவனத்தை ஈர்த்த இன்னொருவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நம்மையறியாமல் ஒரு நடுக்கமே வந்துவிடுகிறது. இவர் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளில் பாதி சென்சார் ஆபிசர்களுக்கு புரியாமல் போவதால் தாயோளி முண்டைகளும், கூ… களும் சரளமாக விழ அனுமதித்திருக்கிறார்கள். அந்த கிராமத்து கிழவியின் “அறுத்துபுடுவேன்….” டயலாக்குக்கு தியேட்டரே துவம்சம் ஆகிறது. மகேஷின் நண்பனாக வரும் பிளாக் பாண்டிக்கும் மனசுக்குள் ஒரு தனி இடம் கிடைக்கிறது.

சூப்பர்வைசரின் மிரட்டலுக்கு பயந்து காதலையே கொச்சைப்படுத்துகிற அந்த இன்னொரு தொழிலாளியும் தற்கொலை செய்து கொள்ளும் அந்த காதலியும் கூட மனசை உலுக்கிவிட்டு போகிறார்கள். சினேகாவின் விளம்பர காட்சி இயல்பாக அமைந்தாலும், பின்னணியில் ஒரு பொருத்தமான அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

திரும்ப திரும்ப கடைக்குள்ளேயே கேமிரா சுழல்கிறது என்று நினைக்கிற இயக்குனர் மெல்ல அதிலிருந்து வெளியே வருகிறார் மேலும் சில கேரக்டர்களின் உதவியோடு! ஆனால், அங்கேயும் தலைவிரித்தாடுகிறது சோகம். ஹைக்கூ போல முடியவேண்டிய காட்சிகள் கூட, நீளமாக சொல்லப்படுவதால் சற்றே அலுப்பு.

தலா ஒரு பாடலை முணுமுணுக்க வைக்கிறார்கள் இசையமைப்பாளர்களான விஜய் ஆன்ட்டனியும் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை), ஜி.வி.பிரகாஷ§ம் (உன் பேரை சொல்லும்போதே). எதையெதையோ செதுக்கிய வசந்தபாலனுக்கு பின்னணி இசையை கன்ட்ரோல் செய்ய முடியாதளவுக்கு என்ன பிரச்சனையோ? கூறு போட்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெரிகிறது. ஜெயமோகனின் வசனங்களில் பிராவகமெடுத்து ஓடுகிறது வட்டார பாஷை.

‘எடுத்துக்கோ எடுத்துக்கோ… அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ’ என்ற ஸ்லோகனை ‘படம் எடுத்துக்கோ…’ என்று புரிந்திருக்கிறார் வசந்தபாலன். அங்காடிக்குள் பெருச்சாளி புகுவதுதான் வாடிக்கை. ஆனால் ஒரு புலியே புகுந்து புலனாய்ந்திருப்பது ஆச்சர்யம்தான்!

Thursday, April 1, 2010

அப்பாவுக்காய் ஒரு கடிதம்

அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...
இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -
என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ
தியேட்டர் சுவரை மீறி
செலவழித்தேன் அப்பா!

நான்
கேட்கத் தயங்குவேனெனத் தெரிந்து
எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால்
நான்
அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!

நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...



வேலைசெய்து
பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ...
வேலைதேடிய எனக்கு
நீ பணம் அனுப்பினாயே ?

இப்படி
இதய தேசத்தில்
உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!

உன் பாக்கெட்டில்
பணம் திருடியது
நான்தான் என தெரிந்தும் ...
இதுவரை
எனைக் காட்டிக்கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய்
நீ செய்த பாசாங்கு!

இதுபோல
கடிதம் சுமக்காத
பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........
என்னுள்ளும் .........

நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது •
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும்
நம்மைப் பிரித்துவிடக்கூடாது.

தமிழனாய்...

சிலம்பரசன்.