இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற
தீர்மானம் செய்ததால்…
அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
நாள் விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல இருக்கும்,
அட அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன இருக்கும்…
உறவோடு உறவாட
தொலைபேசி எனக்கு,
அதில் போன காசுக்கு
இங்கேது கணக்கு…
இங்கே மனைவியோடு உறவாடி
பிள்ளை பெறமுடியாமல்,
பில்லை பெற்றவர் ஆயிரம்…
இளமையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
காலமும் காசுக்கு
கரியாகி போச்சு,
தலையெல்லாம் அதற்குள்ளே
நரையாகி போச்சு,
காசாவது மீந்ததா
செலவாகி போச்சு…
வருமானம் வருமுன்னே
செலவு வந்து சேர்ந்திடும்,
வெறுமாக ஊர் சென்றால்
உறவு வந்து சேருமா?
காசுக் கணக்குகள்
கவலை தருகிறது,
கடந்த காலம்தான்
கண்ணில் வருகிறது…
இனி இஷ்ட்டப்பட்டாலும்,
கஷ்ட்டப்பட்டாலும்,
நஷ்ட்டப்பட்டது திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்கமே தந்தாலும் மனதில்
தாய் நாடு சாகாது…
தமிழனாய்...
சிலம்பரசன்
Wednesday, March 31, 2010
Tuesday, March 30, 2010
அயல் நாட்டு "அப்பா" விகள்
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

Monday, March 29, 2010
இதுதான் நிஜம்!
கனவுகளோடு தான்
படித்தேன்...கல்லூரில் ,
கடன் இன்னமும் இருக்கிறது,
என்றார் ...என் அப்பா,
அம்மாவிடம் ...
கணக்கு போட்டு பார்த்தேன் ...
உள்நாடை விட -அயல்நாடு
அதிகம் கை கொடுக்கும் என்று
கண்டுபிடித்தேன் ..
எப்படி சொல்ல என்று
கை பிசைந்தார்...அப்பா ,
அயல்நாடு என்றால் ..
கொள்ளைப்ரியம் ..என்றேன் ..
புன்சிரிப்போடு ...$$$$
பொய் சொல்லவும் ..
பழகி விட்டான்..என்று
நினைத்தார் ..,அப்பா ...
கிளம்பும் போது புரிந்தேன் ..
என்னை போல் எத்தனை...
சகோதர்கள்...அனுபவித்து
இருப்பார்கள் என்று ...
தந்தை-ஐ பார்த்தேன் ...
ஒரு கண் அழுதது ..
ஒரு கண் சிரித்தது ...
தாய் -ஐ பார்த்தேன்
இரு கண்ணும் அழுதது ..
தொலைபேசி ஐ கண்டு பிடித்தவன் ..கூட
எங்களை போன்று ...
சந்தோசம் பட்டு இருக்க மாட்டன்...
திருமணம் என்றனர் ..
எனக்குள் ..
ஒரு சந்தோசம் ..
ஒரு வருத்தம் ..
ஆசை அறுபது நாள் ..
மோகம் முப்பது நாள் ..
ஆக மொத்தம் லீவ் ..தொண்ணுறு நாள்...
தான் ..
கிளம்பும் போது ..
இப்போது ஆறு கண்கள் ...
அழுதது ....
மாங்காய் கடிக்க ..
போகிறேன் ..என்றால் மனைவி..
அவளோடு இருக்கும்
சின்ன சின்ன சந்தோசங்களை ..
இந்த $$$தினார்.$$$.
தருமா ?..என்று அழுதேன் ...
ஆறு வருடம் ..
கழித்து வந்தேன் ...வீட்டிற்கு ..
தெருவில் விளையாடி ...
கொண்டு இருந்தான் ..என் பையன்..
கட்டி அணைக்க போனேன் ..
"அம்மா யாரோ ஒரு
மாமா வந்து இருக்கா
பாரேன் ..என்றான் ...".
ஒடிந்து போனேன் ...டா ..டா ..
உன் வார்த்தையோடு ..."
தமிழனாய்...
சிலம்பரசன்
படித்தேன்...கல்லூரில் ,
கடன் இன்னமும் இருக்கிறது,
என்றார் ...என் அப்பா,
அம்மாவிடம் ...
கணக்கு போட்டு பார்த்தேன் ...
உள்நாடை விட -அயல்நாடு
அதிகம் கை கொடுக்கும் என்று
கண்டுபிடித்தேன் ..
எப்படி சொல்ல என்று
கை பிசைந்தார்...அப்பா ,
அயல்நாடு என்றால் ..
கொள்ளைப்ரியம் ..என்றேன் ..
புன்சிரிப்போடு ...$$$$
பொய் சொல்லவும் ..
பழகி விட்டான்..என்று
நினைத்தார் ..,அப்பா ...
கிளம்பும் போது புரிந்தேன் ..
என்னை போல் எத்தனை...
சகோதர்கள்...அனுபவித்து
இருப்பார்கள் என்று ...
தந்தை-ஐ பார்த்தேன் ...
ஒரு கண் அழுதது ..
ஒரு கண் சிரித்தது ...
தாய் -ஐ பார்த்தேன்
இரு கண்ணும் அழுதது ..
தொலைபேசி ஐ கண்டு பிடித்தவன் ..கூட
எங்களை போன்று ...
சந்தோசம் பட்டு இருக்க மாட்டன்...
திருமணம் என்றனர் ..
எனக்குள் ..
ஒரு சந்தோசம் ..
ஒரு வருத்தம் ..
ஆசை அறுபது நாள் ..
மோகம் முப்பது நாள் ..
ஆக மொத்தம் லீவ் ..தொண்ணுறு நாள்...
தான் ..
கிளம்பும் போது ..
இப்போது ஆறு கண்கள் ...
அழுதது ....
மாங்காய் கடிக்க ..
போகிறேன் ..என்றால் மனைவி..
அவளோடு இருக்கும்
சின்ன சின்ன சந்தோசங்களை ..
இந்த $$$தினார்.$$$.
தருமா ?..என்று அழுதேன் ...
ஆறு வருடம் ..
கழித்து வந்தேன் ...வீட்டிற்கு ..
தெருவில் விளையாடி ...
கொண்டு இருந்தான் ..என் பையன்..
கட்டி அணைக்க போனேன் ..
"அம்மா யாரோ ஒரு
மாமா வந்து இருக்கா
பாரேன் ..என்றான் ...".
ஒடிந்து போனேன் ...டா ..டா ..
உன் வார்த்தையோடு ..."
தமிழனாய்...
சிலம்பரசன்
Saturday, March 27, 2010
111 பழங்களின் பெயர்கள்
A
Ambarella ------ அம்பிரலங்காய்
Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ------ சருக்கரை பாதாமி
Annona ------ சீத்தாப்பழம்
Annona muricata ------ முற்சீத்தாப்பழம்
Avocado ------ வெண்ணைப்பழம்
B
Banana ------ வாழைப்பழம்
Batoko Plum ------ 'லொவிப்'பழம்
Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
Bilberry ------ அவுரிநெல்லி
Bitter Watermelon ------ கெச்சி
Blackberry ------ நாகப்பழம்
Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry ------ அவுரிநெல்லி
Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter fruit ------ ஆனைக்கொய்யா
C
Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit ------ முந்திரிப்பழம்
Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
Cherry ------ சேலா(ப்பழம்)
Cherimoya ------ சீத்தாப்பழம்
Chickoo ------ சீமையிலுப்பை
Citron ------ கடாரநாரத்தை
Citrus Aurantifolia ------ நாரத்தை
Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்
Citrus medica ------ கடரநாரத்தை
Citrus sinensis ------ சாத்துக்கொடி
Citrus reticulata ------ கமலாப்பழம்
Clementine ------ நாரந்தை
Cocoa fruit ------ கோக்கோ பழம்
Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்
Cranberry ------ குருதிநெல்லி
Cucumus trigonus ------ கெச்சி
Cucumber ------ வெள்ளரிப்பழம்
Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்
D
Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ------ பேரீச்சம் பழம்
Devilfig ------ பேயத்தி
Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
Duku ------ 'டுக்கு'
Durian ------ முள்நாரிப்பழம்,
E
Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்
Emblica ------ நெல்லி
F
Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா
Fig ------ அத்திப்பழம்
G
Gooseberry ------ நெல்லிக்காய்
Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Guava ------ கொய்யாப்பழம்
H
Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie ------ அரைநெல்லி
Honeydew melon ------ தேன் முழாம்பழம்
Huckle berry ------ (ஒரு வித) நெல்லி
I
J
Jack fruit ------ பலாப்பழம்
jambu fruit ------ நாவல்பழம்
Jamun fruit ------ நாகப்பழம்
Jumbu fruit ------ சம்புப் பழம்
K
Kiwi fruit ------ பசலிப்பழம்
Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்
L
Lychee ------ 'லைச்சி'
Lansium ------ அத்திப்பழம்
Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை
Lime ------ தேசிக்காய்
Loganberry ------ 'லோகன் பெறி'
Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Louvi fruit ------ 'லொவிப்பழம்'
M
Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை
Mango ------ மாம்பழம்
Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்
Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Mulberry ------ முசுக்கட்டைப் பழம்
Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி
Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்
N
O
Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்
P
Pair ------ பேரிக்காய்
Papaya ------ பப்பாளிப் பழம்
Passionfruit ------ கொடித்தோடைப்பழம்
Peach ------ குழிப்பேரி
Persimmon ------ சீமைப் பனிச்சை
Phyllanthus Distichus ------ அரைநெல்லி
Plum ------ 'ஆல்பக்கோடா'
Pomelo ------ பம்பரமாசு
Prune ------ உலர்த்தியப் பழம்
Palm fruit ------ பனம் பழம்
Passion fruit ------ கொடித்தோடை
Pear ------ பேரி
Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை
Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'
Q
Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
R
Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rasberry ------ புற்றுப்பழம்
Red banana ------ செவ்வாழைப்பழம்
Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
Rambutan ------ 'றம்புட்டான்'
S
Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
Star fruit ------ விளிம்பிப்பழம்
Satsuma ------ நாரத்தை
Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்
Strawberry ------ செம்புற்றுப்பழம்
Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்
T
Tamarillo ------ குறுந்தக்காளி
Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
Tamarind ------ புளியம்பழம்
Tomato ------ தக்காளிப்பழம்
U
Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)
V
W
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
Wood Apple ------ விளாம்பழம்
Wax jambu ------ நீர்குமளிப்பழம்
111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்கப்பா..

Friday, March 26, 2010
Thursday, March 25, 2010
புது சாறி வாங்க போறீங்களா ......... இதையும் கவனியுங்கோ

நீங்க புதுசா சாறி வங்க போரீங்களா ? நீங்க கடைகாரரிடம் போனவுடன் இப்போவந்த புதிய டிசைன் சாரிகள் காட்டுங்கோ, விலை கூடவாக இருந்தாலும் பறுவாய் இல்ல என்றெல்லாம் சொல்லுவார்கள் .
அப்போ கடைகாரனுக்கு புரிந்து விடும் . ம்ம்ம்ம்ம்ம் நல்ல பாட்டிகள் தான் நம்கிட்ட வசமா மாடிவிடாங்க என்று . ஏன் தெர்யுமா ? அவங்களுக்கு விளங்கி விடும் . குறைய விலை சாரிகளை குடுத்தும் கூட விலைய சொன்னாலும் இந்த பாட்டிகள் வாங்கும் என்று . நீங்கள் அப்பிடி இருக்க கூடாது . நாம் பணத்தை கொடுத்து நல்ல , தரமான பொருளை வாங்க வேண்டும்.
நல்லதாக , நான்கு கடைகளில் விசாரித்து நல்ல சாரிகளாக வாங்க வேண்டும் . நான்கு கடைகளில் விசாரிக்கும் போது நீங்கள் தேடும் சாரியின் விலை எவ்வளவு என்று விளங்கும் . எந்த கடையில் விலை குறைவாக சொல்லுகிறார்களோ அங்கு வாங்குங்கள் .
துணியின் வித்தியாசம், பளபளப்பு எல்லாவற்றையும் கவனிக்கவும். நீங்கள் வாங்கும் சாரீ தோய்த்து தோய்த்து பாவிக்கலாமா என்பதையும் கவனிக்கவும் .
விசேட தினங்களுக்கு கட்டும் சாரியை ஒருவர் இறந்து கொண்டாடும் மரண சடங்குக்கு கட்ட ஏலாது . அதை புரிந்து கொள்ளுங்கள் . விசேட தினங்களுக்கு கட்டும் சரியை விசேசங்களுக்கு மட்டும் உடுத்துங்கள் .
சடங்கு வீடுகளுக்கு கட்டுபவை சும்மா நோமலக இருந்தால் சரி. அவை தோய்த்து , தோய்த்து மீண்டும் பாவிக்க கூடியதாக இருந்தால் நன்று.
ஏன் எனில் நாம் நம்ம பணத்தை தான் கொடுத்து கடையில் பொருட்களை வாங்கிறம். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்த வீணாக செலவழிக்காமல் நல்ல தரமான , நீண்ட நாட்களுக்கு பாவிக்க கூடியதாக , தரமானதாக , எங்களுக்கு பிடித்ததாக , விலைக்கு தகுந்ததாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும் .
பிறகு சாரிகளை கடையில் வாங்கி பெட்டிக்குள் அடுக்கி , அடுக்கி வைத்து பிரயோசனம் இல்லை. அப்பிடி சேர்த்து வைக்கும் பேர்வழிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
அந்தந்த காலத்துக்கு ஏத்தபடி என்னென்ன டிசைன் வருகிறதோ அதை வாங்கி கட்டிக்கலாம் ஒழிய வாங்கி அடி பெட்டிக்குள் சேர்த்து வைப்பதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது . இதை சில பெண்மணிகள் உணர்வதில்லை
வளர்ச்சியா? வீக்கமா?
எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்!!
தமிழகத்தில் இப்போது
தமிழ் வளர்ப்போர் எண்ணிக்கை
தாறுமாராய்க் கூடி விட்டது
விளம்பரப் பலகைகளில்
வரிக்கு வரி தமிழ்
பார்த்தால் தமிழ் போல தெரியும்!
அதையே பிறர் படிக்கும் போது
கேட்டால் ஆங்கிலம் போலப் புரியும்!!
அப்படியொரு அற்புத வளர்ச்சி!!!
பொங்கு தமிழ் இப்போது
புதிய பரிமாணத்தை நோக்கி
இது அபரிதமான வளர்ச்சியா?
இல்லை,விபரீதமான பிறழ்ச்சியா??
வீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்
வித்தியாசம் தெரியாத
வீணர்களாகிக் கொண்டிருக்கிறோம்!
அன்னைத் தமிழை நாம்
அலங்கோலப் படுத்திகொண்டிருக்கிறோம்!!
XXXXXX சில்க்ஸ்
XXXXXX ஜுவல்லர்ஸ்
XXXXXX ரெடிமேட்ஸ்
XXXXXX ஸ்டுடியோஸ்
XXXXXX கார்மெண்ட்ஸ்
XXXXXX ஸ்டோர்ஸ்
XXXXXX பேங்க்
XXXXXX பங்க்
XXXXXX ஹோட்டல்
XXXXXX ரெஸ்ட்டாரன்ட்
XXXXXX ஹாஸ்ப்பிடல்
XXXXXX மெடிக்கல்
...................
...................
இவை ஒரு சிலதான்
இருக்கிறது ஊரெல்லாம்
இதுபோல இன்னும் பல
இவை எல்லாமே தமிழ்தான்!
இதில் எங்கே இருக்கிறது தமிழ்?
உண்மை நிலை உணர்த்துவோம்
உயிர் தமிழ் (மட்டும்) வளர்ப்போம்
எனது கிறுக்கல்கள்
உன்னோடு .....
உன்னோடு
பேசிய பிறகு...
யாரோடும்
பேச பிடிக்கவில்லை..
நீ பேசியபின்தான்
தமிழ்...
கன்னித்தமிழானது..!
உதவி
தனிமையில் கிடந்து
தத்தளிக்கிறேன்...
எப்பொழுதாவது
உதவி கரம்
நீட்ட வருகிறது
உன் நினைவு...!!
உன் கண்கள்
உன் கண்களைக் கண்டால்
மீன் என்று சொன்னவர் யார்?
அவை என் ஊள்ளத்தைப்
பிடித்திழுக்கும் கொக்கியல்லவா?
அழகு
எனக்கும் சேர்த்து அழகாய் இருக்கிறாய் நீ!
உனக்கும் சேர்த்து அன்பாய் இருக்கிறேன் நான்!
கடைசி சந்திப்பு
நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..
உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..
நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

Labels:
எனது கிறுக்கல்கள்
Wednesday, March 24, 2010
தமிழ் வாழ்கிறதாம் - பகலவன் கவிதை.

தமிழ் வாழ்கிறது
தமிழ் நாடு அழிய,
இவன் வாழ்கிறான்
தமிழினம் அழிய,
மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க,
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா,
இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை,
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட ,
மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ ,
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ,
பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள் வாழ,
இலவசம் மயக்கம் கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய் வாழ,
தமிழை தேடுகிறேன்
செம்மொழி தமிழை தேடுகிறேன்,
தமிழனை தேடுகிறேன்,
தன்மான தமிழனை தேடுகிறேன்,
கட்சிக்கு சொந்தக்காரன்
பாதி தமிழன்,
சாதிக்கு சொந்தக்காரன்
மீதி தமிழன்,
அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு,
அதை புரிந்து கொள்ளாதவரை
நீ தான் தமிழனே தமிழுக்கு சாபக்கேடு,
தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டு போக,
தமிழனின் வீரத்தின் பட்டியல்
குருடாகி போனது,
தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல் விளையாட,
தமிழ் நடனம் ஆடுகிறதாம்
டாஸ்மாக்கில் குடிகார தமிழன் ஆட,
தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலை அல்ல,
தமிழனம் ஒளிர்கிரதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திறிய,
வந்தாரை வாழ வைத்தானாம்,
வந்தவன் எல்லாம் ஏறி மிதிக்க,
இந்திய அன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழக மீனவனை ஏறி நசுக்க,
ஆம் எங்கும் தமிழ்நாடு வாழ்கிறது,
தமிழ் அழிய,
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய,
....பகலவன்....
Monday, March 22, 2010
வாழ்த்துவோம் வாங்க

இன்று(23/03/2010) தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. தேர்வு எழுதும் அனைவரும் நல்ல விதமாக தேர்வு பெற வாழ்த்துவோம்.
நலமுடன் இருப்பதாக பிரபாகரன், பொட்டு அம்மான் கடிதம்.

நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் , அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் பெயரில் உலகம் முழுக்க உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.
கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியது, வீடியோ பசத்தையும் காட்டியது.
ஆனால், அது பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடல் என்று புலிகள் தரப்பு மறுத்தது.
இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப் புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து தொடக்கம் முதலே உறுதியான தகவல்கள் இல்லை.
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. இன்டர்போலும் பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையத் தளத்தில் அறிவித்துள்ளது. இது புலித் தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து பொட்டு அம்மான் குறித்து நீண்ட அமைதி காத்து வந்த இலங்கை, போரின் கடைசி நாட்களில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என்று சமீபத்தில் அறிவித்தது.
இந் நிலையில் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரில் உலகம் முழுக்க உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.
அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அவர்கள் தான் எழுதினார்களா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.
நன்றி: http://thatstamil.oneindia.in/news/2010/03/22/we-are-alive-prabhakaran-pottu.html
கிளி வடிவத்தில் இருக்கும் அதிசய பூ

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.
அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.
இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.
தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.
விண்ணைத்தாண்டி வருவாயா
காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…

அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…

Sunday, March 21, 2010
கவிதை சொல்ல........

இந்த கண்ணீர்
எனக்கானதா?
என்
பணப்பைக்கானதா?
எனை பற்றியே
சிந்திப்பதாய் சொல்கிறாய்!
வந்தவுடன் ஐஸ்கிரீம் கடைக்கல்லவா
இழுக்கிறாய்?
சோகமாய் முகத்தை
வைத்துகொண்டு
எப்போதும்
அழுதே சாதித்துவிடுகிறாய்!
புதுப்பட டிக்கெட்டையும்
பாப்கார்ன் கோப்பையையும்
இதழ்திறந்து
உன் இதயம் திறந்தாய்!
பூக்கள் வாங்கியே
என் தனம் துறந்தேன்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!

NRI தமிழ் நெஞ்சங்களும் தமிழினை நேசிக்கும் உள்ளங்களும் சங்கமிக்க அன்புடன் வரவேற்கிறேன். அனைவரிடத்தும் அன்பெனும் அமுதத்தை வாரி வழங்கவும், அறிவெனும் அமுதம் பருகிடவும் அனைத்து நட்பு உள்ளங்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.
தமிழனாய்... சிலம்பரசன்
முளைக்கும் காதல்..!
புதைத்து தான் பார்த்தேன்...
என் மனமென்ற கல்லறையில்
உன் இனிய நினைவுகளை..!
அது காதலாய் முளைத்து,
கண்டபடி வளர்ந்து நிற்குமென்று
கனவிலும் எண்ணவில்லை..!
என் மனமென்ற கல்லறையில்
உன் இனிய நினைவுகளை..!
அது காதலாய் முளைத்து,
கண்டபடி வளர்ந்து நிற்குமென்று
கனவிலும் எண்ணவில்லை..!
Labels:
எனது கிறுக்கல்கள்
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
சேகுவேரா இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

பொலிவியாவில் சேகுவேரா
பொலிவியாவில் [[சி.ஐ.ஏ]] மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்க]] சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் [[ஒக்டோபர் 9]], [[1967]] இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.
சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

Saturday, March 20, 2010
ஒத்த ரூபா ரேஷன்
பாதி வயிறு
முழு வயிறாகி
சுகமாய் தூங்குது பிள்ளை
இருபது கிலோ
இருபதே ரூவா
மீதிக்கு செலவும் போக
பொழுது கழியுது சுகமா
ஒத்த ரூபா ரேஷனால்
இன்னிக்கு ஒண்ணாம் தேதி
இப்பவே போனா
வந்து சமச்சிடலாம்
பிள்ள பள்ளி விட்டு
பசிச்சு வரதுக்குள்ள
ஒரு கூட்டம் நிக்குதே வரிசைல
ஒருவா கஞ்சித்தண்ணி
குடிக்காம வந்திட்டேன்
அட.. பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடைல காணுது?
"வீட்ல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"
வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு
நாயாகிப் போனேன்...
முழு வயிறாகி
சுகமாய் தூங்குது பிள்ளை
இருபது கிலோ
இருபதே ரூவா
மீதிக்கு செலவும் போக
பொழுது கழியுது சுகமா
ஒத்த ரூபா ரேஷனால்
இன்னிக்கு ஒண்ணாம் தேதி
இப்பவே போனா
வந்து சமச்சிடலாம்
பிள்ள பள்ளி விட்டு
பசிச்சு வரதுக்குள்ள
ஒரு கூட்டம் நிக்குதே வரிசைல
ஒருவா கஞ்சித்தண்ணி
குடிக்காம வந்திட்டேன்
அட.. பெரியவூட்டு ஐயா நிக்காரே!
என்னைய்யா ரேஷன்கடைல காணுது?
"வீட்ல புதுசா ரெண்டு நாய்ங்க
வாங்கி இருக்கேன்ல"
வரிசையில் அரிசி வாங்க
நின்றவர்களுடன் சேர்ந்து
ரேஷன் தின்னும்
நானும் ஒரு
நாயாகிப் போனேன்...
வருந்துகிறேன் !!
என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!
Labels:
எனது கிறுக்கல்கள்
கவிதை
கடும் கோபத்தில்
கட்டுக்கடங்காத் தேனீக்கள்
கூட்டமாய் என்னை நோக்கி....
நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........
நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....
ஆனாலும்
நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....
அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்
வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......
ஊட்டும் தேனைத்தான்
சேகரிக்கும் என்றாலும்
அதற்கு....
கொட்டும் விசக்கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு
தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை
கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்
அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்
எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்
வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....
கட்டுக்கடங்காத் தேனீக்கள்
கூட்டமாய் என்னை நோக்கி....
நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........
நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....
ஆனாலும்
நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....
அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்
வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......
ஊட்டும் தேனைத்தான்
சேகரிக்கும் என்றாலும்
அதற்கு....
கொட்டும் விசக்கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு
தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை
கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்
அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்
எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்
வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)