
எங்கோ பிறந்தவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
என்னை பிறப்பித்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?
உடன் உண்ணப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உணவு இட்டவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?
கைபிடிக்க போகின்றவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
கைபிடித்து சொல்லிக்கொடுத்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?
வாலிபத்தை சுமப்பவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
வயிற்றில் சுமந்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?
உடன் உறங்கப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உறங்க தாளாட்டியவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?
என்னுடன் வாழப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
எனக்காக வாழ்பவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா
1 comments:
நான் வலைப்பதிவில் எழுதியதை அப்படியே பகிர்ந்துவிட்டு கீழே தங்கள் பெயரை இணைத்துள்ளீர்களே.
இது ஞாயமா?
http://jackpoem.blogspot.in/2009/01/blog-post_7592.html
Post a Comment